டிசம்பர் மாதம் வந்து விட்டதால் சங்கீத வாசனையுடன் ஒரு புதை புதிர் தந்தார் வாஞ்சி. கர்நாடக இசையென்ற இனப வெள்ளத்தில் நீந்தும் நாங்கள் (பார்த்தசாரதி & அம்ருதா) உங்களையும் அழைக்கிறோம். இந்த புதைபுதிரையும் விடுவிக்க பெரிய இசைஞானம் தேவையில்லை. குறிப்பிலிருந்தே விடுவிக்க முடியுமென நம்புகிறோம். விடுவிக்க முடியாதவர்களுக்காக கர்நாடக இசை சம்பந்தப்பட்ட 300 சொற்கள் கொண்ட பட்டியல் தந்துள்ளோம் Click for Terms in Carnatic music / கர்நாடக இசை சம்பந்தப்பட்ட சொற்கள்). இந்த குறுக்கெழுத்தில் வரும் 23 குறிப்புகளுக்கும் விடைகள் பட்டியலில் உள்ளன. கர்நாடக இசையை ரசிக்கவும் புதிரை அவிழ்க்கவும் வாழ்த்துக்கள்.
|
|
குறுக்காக: 1.காலடி சங்கரர் முன் தாளம் (2)
3.மாய மலரும் முதலில் தருவது கலந்த ராகம் (7)
6. மங்களத்தின் முன் பாடினால் சண்முகப்ரியா ஆடுவாள் (4)
7.சுமையா முதல் சுமை சேர்த்தது? ஆழ்வார் பாடியதா? (4)
8.கணினியால் இடையிழந்தாலும் முழுமையான ராகம் கிடைத்தது (4)
10.மாயவர மத்தியில் ரயில் கிடையாது,. கலைத்த ராகம் உண்டு (6)
11.சிவனின் பாடலால் பொற்கிழி பெற்றவன் திரும்பி முதல் ஸ்வரமில்லா சங்கம் சேர்த்து வாசிப்பது (6)
13.மனோகரி பாதி பிச்சை சேர்த்து படைப்புத் திறனுடன் பாடும் விதம் (2,4)
15.நோன்புணவு முதல் ராகம் சேர்த்து மன்பூண்டியா பிள்ளை காலத்திலிருந்து தாளம் தட்டுவது (4)
16.பாட்டு கேட்பவன் இசையரசி கன்னியென்று கொள்வான் (4)
17.முதலில் வரும் சிறிய தெருவா சீதம்மா மாயம்மா இருப்பது (4)
19.கண்ணன் குடையாய் பிடித்த மலை மன்னனை விட்டு பசு சேர்த்தது தனி (7)
20.அருணாசல கவிராயர் பைரவியில் கேட்பது எவரோ? (2)
நெடுக்காக: 2.தஞ்சாவூரின் தி.நகர் (5)
3.அறிவுள்ளே ஸ்வரம் அதிசய ராகம் (3)
4.ஐவரில் மூத்தவனே, தலையிழந்த யுவதி சேர்த்து பாடும் ராகம் என்ன? (5)
5.அழகு தழுவும் கச்சேரி சிறப்பாகும் (2, 4)
9.உரலின் துன்பம் போல் இரு மடங்கு வாங்கும் பறை (5)
10.ஒளி குன்ற, தாளம் குறைய சுபம் (5)
12.கரார் ஜதியா கலந்து கர்நாடக இசை அரசரானது? (6)
13.மணியவன் குரங்கு பிடித்து பானை செய்பவன் வேண்டாமென்ற ராகம் (5)
14.மூன்று பாதியாக உடைந்து கலந்தது மஞ்சள் மாரனின் கையா? காயத்ரியுடன் சேர்ந்து பாடிய ராகமா? (5)
18.ராகம், பல்லவி நடுவே கொடை? (3)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |