அம்மா

If you cannot read Tamil but can understand Tamil, you can click on the links to listen to the audio of this interview by Madhu. The interviwee is Rukku, his mother

click here to listen to First half

அம்மா என்றவுடன் உன் நினைவில் வருவது
நாங்கள் ஸ்ரார்த்தம் செய்ய கயா சென்றபோது அங்கிருக்கும் குருக்கள் அம்மாவின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் விளக்கியதுதான் ஞாபகம் வருகிறது. கடவுள் எல்லா இடத்திலும் பிரத்தியக்ஷமாக முடியாது என்பதால் தாய் என்ற ஸ்தானத்தைப் படைத்தார். அதனால் தாயிடம் எப்படி அன்புடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டுமென்று மிக உருக்கமாக அவர் சொன்னபோது எங்கள் எல்லார் கண்களிலும் நீர் வந்தது.

பாட்டியிடம் எல்லோரையும் வசீகரம் செய்த குணங்கள்
விருந்தோம்பல், அனைவரிடமும் இனிமையாகப் பழகும் விதம் இவைதான் முதலில் நினைவுக்கு வருகின்றன . அம்மா எங்களை நன்றாக train செய்தார் நாங்கள் வீட்டு வேலைகளை அழகாகச் செய்ய அம்மாவிடம்தான் கற்றோம். ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொடுத்தது , மற்றும் எவ்வளவோ. எங்களை வளர்த்த விதம் பற்றி சொல்ல வார்த்தைகள் கிடையாது. மற்ற உறவினர்கள் ஜெயம் தன்னோட பசங்களை எப்படி நேர்த்தியாக வளர்த்திருகிறாள் பாரு''என்று பாராட்டுவார்கள் .

நீங்கள் அம்மாவிற்கு உதவுவதுண்டா?
எல்லோருக்கும் தினம் செய்ய வேண்டிய வேலைகளை அம்மா allot செய்து விடுவாள் நாங்களும் அவற்றை சரியாக செய்து விடுவோம். நாங்கள் ஏழு பேர் , ஹேமா பொள்ளாச்சியில்தான் பிறந்தாள் அக்கா தங்கைகள் ஒருவக்கொருவர் உதவிக்கொள்வோம் அம்மாவிற்கு பொறுமை அதிகம் எல்லை மீறினால்தான் கோபித்துக்கொள்வாள். நாங்களும் அம்மாவிற்கு பிடிக்காததை செய்ய மாட்டோம். அப்படி எதாவது செய்தால் கூட அம்மா நம்மை திட்ட மாட்டாளா என்று எதிர் பார்ப்போம். அன்பாலேயே கவர்ந்து விடுவாள் அம்மா. நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர் .

உதாரணம்?
அப்பா அடிக்கடி டூர் சென்று விடுவார். அம்மாதான் வீட்டு நிர்வாகம் முழுவதும் கஷ்டம் வந்தாலும் தைரியமாக அம்மா அதை எதிர் கொள்வாள் ஆனால் அப்பாவிற்கு அது முடியாது. குறைந்த சம்பளத்தில் நிறைவாக குடும்பம் நடத்த முடியும் என்று செய்து காட்டினாள் அம்மா. பிள்ளை ரகுவிற்கு பெரிய உடல் பிரச்சினை வந்தபோது அம்மா கொஞ்சம் கூட மனம் தளரவில்லை வேறு யாராவதாக இருந்தால் இடிந்து போயிருப்பார்கள்.

ரகு மாமாவிற்கு என்ன ப்ராப்ளம் வந்தது?
ரகுவிற்கு அடிக்கடி தலைவலி வந்தது நியூரோசர்ஜனிடம் சென்றபோது அவர் பரிசோதனையெல்லாம் செய்தபின் மூளையில் கட்டி என்றும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறினார். அது ஒரு மேஜர் ஆபரேஷன் skull-ஐத் திறந்து மூளையில் ஆபரேஷன் ஆபரேஷனிற்கு முன் ஒரு கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள் எதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை ஏன்று எழுதியிருந்ததை பார்த்து மொத்த குடும்பத்தினரும் பயந்து விட்டோம். அம்மாதான் கையெழுத்துப் போட்டாள் எல்லா கடவுள்களிடம் வேண்டிக் கொண்டோம் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்தது. ரகு வலியில் கத்தும்போது அருகிலிருக்கும் தைரியம் எனக்கும் தாத்தாவுக்கும் கிடையாது தைரியமாக எதிர் கொண்டது என் அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் இருவரும்தான் 24 மணி நேரமும் அருகிலிருந்து ரகுவை கவனித்துக் கொண்டார்கள்.

click here to listen to Second half

அம்மாவின் தைரியத்துக்கு இன்னுமொரு உதாரணம் காஞ்சிபுரத்தில் இருக்கும்போது அப்பா ரத்த vomit செய்தார் அம்மாவிற்குத் தெரிந்தவுடன் உடனடியாக அவரை கவனித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது எல்லாம் அம்மாவே தனியாகவே செய்தாள்.

நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது பொருளாதார ரீதியிலும் அம்மா மிகவும் கஷ்டப் பட்டாள் கடன் வாங்குவது, அப்பாவை சம்பள அட்வான்ஸ் வாங்கச் சொல்வது, அப்பா டூருக்குப் போனால் கஷ்டம் என்றாலும் பணம் வரும் என்பதால் அதையும் ஊக்குவிப்பாள். அண்ணா வேலைக்குப் போக ஆரம்பித்தபின்னர்தான் அம்மா கஷ்டப் படுவது குறைந்தது. சம்பாதித்தது அப்பாதான் என்றாலும் முழுக் குடும்ப நிர்வாகமும் திறமையாகச் செய்தது அம்மாதான்.

பேரன் பேத்திகளாகிய எங்களுக்கு பாட்டியின் விருந்தோம்பல் குணம் நன்றாகவே தெரியும். நினைவு தெரிந்த நாட்களில் இருந்து பாட்டியின் வீட்டுக்குப் போனால் எதுவும் சாப்பிடாமல் வந்தது கிடையாது. மற்றவர்களிடமும் அப்படித்தானா?
யார் வந்தாலும் அம்மா உபசரிப்பாள் அம்மாவின் சகோதர சகோதரிகள் முன் கூட்டி சொல்லாமல் வருவதுண்டு அப்பாவின் cousins காழியூரில் இருந்தார்கள் செய்யார் அருகில் இருந்ததால் அடிக்கடி வருவார்கள். அவ்வப்போது எல்லா ஊருக்குமே வருவார்கள். யார் வந்தாலும் பணக்கஷ்டம் உடல் கஷ்டம் எதையும் பாராட்டாது அவர்களை உபசரிப்பாள். விருந்தோம்பலில் அம்மாதான் பெஸ்ட்.

கடைசியாக
வாழ்க்கையில் கஷ்டப்பட்டவள் அம்மா எல்லா பிள்ளைகள் பெண்களும் வாழ்க்கையில் படிப்பால் முன்னுக்கு வந்தனர் பின் நாங்கள் எல்லோருமே அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொண்டோம். அதில் எங்களுக்கும் மனத் திருப்தி, அம்மாவுக்கும்தான்.

ருக்கு & மாது
மே 18, 2021BACK