திரு வாஞ்சிநாதன் அமைத்து வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் குறுக்கும் நெடுக்கும் என்ற பெயரில் வெளியாகின்றன. பல ஆண்டுகளாக ஆங்கில Cryptic crosswordகளை solve செய்து வரும் நாங்கள் கலிபோர்னியாவில் இருந்தபோது ஜனவரி 2009 தென்றல் பத்திரிகையில் குறுக்கும் நெடுக்கும் பார்த்தவுடன் அதன் தீவிர ரசிகர்ளானோம். சென்னை வ்ந்தபின் இணையதளத்தில் தேடி 49 குறுக்கும் நெடுக்கும் புதிர்களை download செய்து அவற்றை solve செய்து ரசித்தோம். இவ்வள்வு அழகாக குறுக்கெழுத்துப் புதிர்களை திரு வாஞ்சிநாதன் அமைக்கிறாரே, நாமும் முயற்சி செய்யலாமே என கான மயிலாடக்கண்ட் வான்கோழி போல் நாங்கள் அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து)-1 என்ற பெயரில் அமைத்து . திரு வாஞ்சிநாதன் அவர்களுக்கு குருதட்சிணையாக அனுப்பினோம். அதற்கு அவர் எழுதிய பதில் இதோ. "அம்ருதா & பார்த்தசாரதி இவர்கள் இருவரும் கடந்த மூன்றுமாதங்களாகத் தென்றல் புதிருக்கு விடைகளனுப்பி வரத் தொடங்கியுள்ளவர்கள். இது போதாதென்று, என்னைப் பழி வாங்குவதற்குப் புதிரையும் அமைத்து அனுப்பியுள்ளனர். (அப்படித்தான் நானும் ஆரம்பித்தேன்). இத்தனை ஆர்வலர்கள் இக்குழுவிலும், இலவசத்தின் வலைப்பதிவிலும் இருப்பதால் வலையில் வெளியிடுங்கள் என்று அவர்களுக்குக் கூறியுள்ளேன். விரைவில் வெளிவருமென்று அவர்கள் கூறியுள்ளனர். பக்தகோடிகள் திரளாக வந்து புதிர்த் தேங்காயை உடைத்து குறுக்குவழீஸ்வரன் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். வாஞ்சிநாதன்"

அபாகு (அம்ருதா, பார்த்தசாரதியின் குறுக்கெழுத்து) 01 (ஏப்ரல் 2009)

 

1

 

2

 

3

 

4

 

 

5

 

 

 

 

 

6

 

 

 

 

 

 

 

 

 

 

7

 

 

 

8

 

 

9

 

 

 

 

10

 

 

 

 

 

11

 

 

 

 

 

12

 

 

 

 

 

 

 

13

 

 

 

14

15

 

16

 

 

 

 

 

 

17

 

 

 

 

 

 

 

 

குறுக்காக

3 ராணி அதை முதலில் அனுபவி (3)

5 கவிழ்ந்தாலும் விழ மாட்டார் நகைச்சுவை நாயகர் (5)

6 பட்டை முதலில் கிளப்பிய பவார் பட்டை (2)

7 நம் நடுவே முதல் கஷ்டம் விரல் நுனியில் (3)

8 கலயம் நடத்தி நலம் இல்லா சட்ட விரோத இறக்குமதி செய்த (5)

11 தியாகராஜன் பாதி மானுடன் பாதி சேர்த்து கணித மேதை (5)

12 அதை மாத்து என்ற மாது போனாள் அப்பாவின் தங்கை வந்தாள் (3)

14 சிவனை வணங்குகின்ற எதிரி திட்டு (2)

16 அரசன் கோலா? ராமர் வில்லா? (5)

17 இலங்கையில் பாதி அங்கத்தில் (3)

நெடுக்காக

1 மாதரசி பாதி திரும்ப இடையில் விக்கலா? கஷ்டப்படலாமா? (6)

2 அன்று முதல் இடையில்லாத டமாரம் பிடிவாதம் (3)

3 2ல் விட்டது பாதி நட்சத்திரம் (5)

4 திருப்பிப் படி அழிக்கும் கடவுளே (2)

9 மாருதி கத்த கலைந்து சரியாக (6)

10 வாமனன் கேட்டதை அளக்கும் கருவி (5)

13 தண்டு வடத்தில் வழியில் போன பூச்சி (3)

15 சூசை கையில் ஜாடை காட்டு (2)

 

Send your solutions to spchennai@gmail.com

 

 Click for Hints to solve the Crossword

BACK