ஹை(ஜோ)க்கூ - கிரிஜா மணாளன் [girijamanaalan2006@yahoo.co.in]

 

க‌ட‌ன் த‌க‌ராறில் க‌த்திக் குத்து...
கொலை! 
பாவ‌ம், க‌ட‌ன் த‌ந்த‌வ‌ன்.

ooOoo

ம‌னைவியின் க‌ல்ல‌றை ஈர‌ம் ம‌றையுமுன் ம‌றும‌ண‌மா? 
ச்சே! 
விசிறியுட‌ன் க‌ண‌வ‌ன்.

ooOoo

கால‌மான‌ என் தாத்தா 
க‌ரைவேட்டி இளைஞ‌னாக‌.. 
வாக்குச் சாவ‌டி வ‌ரிசையில்!

ooOoo

ஓட்டொன்று வீணாகிய‌தே என‌ ஓல‌மிட்ட‌ழுதார் 
வேட்பாள‌ர் !
ம‌னைவியின் ம‌ர‌ண‌ம்.

ooOoo

குறைத்து வைத்திருக்க‌ல‌ம் மொய்யை 
குறுகுறுத்த‌து ம‌ன‌சு.. 
இலையில் பாதி அப்ப‌ள‌ம்.

ooOoo

சாம்பாரில் த‌ண்ணீர் க‌ல‌ந்த‌தால் 
ச‌ண்டை... 
க‌ல‌ப்புத் திரும‌ண‌ப் ப‌ந்தியில்!

ooOoo

சித்திர‌குப்த‌னுக்கு சீட்டு கிழியுமோ? 
வாக்காள‌ர் ப‌ட்டிய‌லில் 
இற‌ந்த‌வ‌ர் பெய‌ர்க‌ள்!

ooOoo

எதிர்கால‌ப் பிழைப்புக்கு இப்போதே ப‌யிற்சி... 
ப‌ள்ளிச் சிறுவ‌னின் முதுகில் 
பார‌மாய் புத்த‌க‌ மூட்டை!

*********

 BACK