நிழலை நிஜமாக்கும் கலை!

 

சுழன்று வரும் சூறாவளி


எரிக்க வரும் எரிமலை


மயக்க வைக்கும் மார்ஸ் கிரகம்


இதையெல்லாம் நிஜம் என்று உங்களை நம்ப வைத்ததுதான் நவீன சிற்பி மேத்தியூஸ் அல்பனசேவின் வெற்றி. கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பது இவரைப் பொருத்தவரை உண்மை

ஆமாம் இவையெல்லாம் நிஜம் அல்ல. வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே இவற்றை செய்து, அல்பனசே அசத்தியிருக்கிறார். இதில் சில படைப்புகள்3 அடி நீளத்திற்கும் குறைவானவை என்றால் நம்ப முடியாது.

டைல்ஸ் கற்களை இணைக்க உதவும் க்ரோட் எனப்படும் கலவை, ஸ்டீல் உல் எனப்படும் மெல்லிய இரும்புத்துகளால் ஆன துணி உருண்டை மற்றும் சின்னமான் மரப்பட்டை போன்றவற்றைக் கொண்டு அரும்பாடு பட்டு தயாரித்தாலும், இதை இவர் காமிராவில் எடுக்கும் கோணம்தான் கண்ணைக் கவரும் பிரமிப்பை பிரமாண்டத்தை அந்தப் படைப்பிற்கு கொண்டு வருகிறது என்பதை அல்பனசேவே ஒப்புக்கொள்கிறார்.

26வயதாகும் அல்பனசே இந்த அரிய கலைப்படைப்பு ஒன்றை ரூ.48 ஆயிரம் வரை விற்பனை செய்கிறார்.********

From http://www.tamilvanan.com/


BACK to the Main Page