கூடைப்பந்தாட்டம் ஆடும் தாய்லாந்து யானைகள்தாய்லாந்தில் உள்ள யானை சவாரி மையத்தில் உள்ள யானைகள் கூடைப்பந்து ஆடுகின்றன. இதற்கான சிறப்புப் பயிற்சி பெற மாலி என்ற 6 வயது யானையும், டொக்டாக் என்ற 9 வயது யானையும் தேர்வாகியுள்ளன. மையத்தில் உள்ள மனிதப் பயிற்றிசியாளர்கள், இந்த யானைகளுக்கு முறையாக கூடைப்பந்தாட்டத்தை கற்றுத் தந்துவருகின்றனர்.

இது ஓரு வித்தியாசமான முயற்சி என்பதுடன் கூடைப்பந்தாட்டம் ஆடுவதால் யானைகளின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் கூறுகிறார்கள்.

ஆறுமாத பயிற்சித் தர முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், பயிற்சி தொடங்கிய சில வாரங்களிலேயே கூடைப்பந்தாட்டத்தில் கில்லியாக மாறிவிட்டனவாம் இந்த குட்டி யானைகள். மையத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கும் உலகில் வேறு எங்கும் காணாத காட்சியைக் கண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது.

*********

From http://www.tamilvanan.com/


BACK to the Main Page