பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 150 குறுக்கெழுத்து (07-10-2020) - Fillable.

பா பு தொடர்ச்சியாக 150 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்தேன்.
உணவு ஸ்பெஷல் (குறிப்பிலோ, விடையிலோ சாப்பாடு உண்டு)

ஆர்.நாராயணன், ஸௌதாமினி, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், பாலூ மீ, ராமராவ், ஹேமலதா, அம்ருதா, மாதவன், ஹரி பாலகிருஷ்ணன் (mailadmin@puthirmayam.com ஹரி பாலகிருஷ்ணன் என்றுதான் நினைக்கிறேன் ) ஆகிய 9 பேர் விடைகள் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதி

QWERTY keyboard-ஜயே உபயோகித்து தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
5.பூண்டின் துண்டு கடித்து உண்ண வேண்டும் (2)
6.அதிதிகள் தலைகளிழந்து தாவி வருந்தினர் (6)
7.பிரமன் ஆக்கிய இறைவனுக்களித்த (4)
8.கூழ் செய்யத் தேவை கோல் (3)
10.சப்பாத்தியுடன் சாப்பிடும் வாத்தியார் பெருசு (3)
12.புளி சேர்க்காமல் பாரணம் செய்யும் பன்னிரண்டாம் நாள் (4)
15.தகரங்கள் உலகம் இல்லாமல் பார்க்குமா? நாவில் சர்க்கரையா? (6)
16.ஜொள்ளு விடுமிடம் சாப்பிடத் தேவை (2)

நெடுக்காக:
1.மாவை வெளியேற்றுவான் ஆயிரங் கண்ணன்? (4)
2.அதன் மெய்யிழந்த விதை கலந்து வேகச்செய்தது (5)
3.முந்த வேண்டிய வரிசை (3)
4.தீங்கு தன மாற்றம் செய்தால் நரசிம்மருக்குப் பிடிக்கும் (4)
9.கள்ளியின் உணவிற்கு அடிப்படை அரைத்த அரிசி இல்லை (3,2)
11.ஒரு சித்தர் முடியாமல் சுவைத்தது (4)
13.தழை நடுவில் வாலை நுழைத்தால் விருந்தை ஏற்கும் (4)
14.கவிதைக்கு உண்ட பின் இலையுடன் கடிக்கப்படும் (3)

Posted on 7th October 2020 from Bangalore. Solution and Names of Solvers posted at 11.00 AM IST on 15th October 2020


Click here to visit my Home Page